Actor Saif Ali Khan Case | Accuse Vijay Das & Saif File Pic (Photo Credit: @ANI X / Instagram)

ஜனவரி 19, மும்பை (Cinema News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலி கான் (Saif Ali Khan), தனது மனைவி கரீனா கபூர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், மர்ம நபர் ஒருவரால் 6 முறை கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து, குடும்பத்தினரால் மீட்கப்பட்ட சைப் அலி கான், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது.

6 முறை கத்திகுத்து:

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சைப் அலிகானின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் நடவடிக்கையை துரிதப்படுத்தினர். நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் கொள்ளையன் நுழைந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட முற்பட்டபோது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. மேலும், குடும்பத்தினரை கொலை செய்வதைப்போல செயல்பட்ட நபரை, அலி கான் தடுக்க முற்பட்ட காரணத்தால் 6 முறை சரமாரியாக குத்தப்பட்ட சம்பவம் தெரியவந்தது. Bigg Boss Season Tamil 8: பிக் பாஸ் தமிழ் Grand Finale.. அசத்தல் ப்ரோமோ வெளியானது.. லிங்க் உள்ளே.! 

பாதுகாப்பு குறைபாடு:

இதனிடையே, மும்பை காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை முன்னெடுத்து வந்த நிலையில், சைப் அலி கானை கத்தியால் குத்திய விஜய் தாஸ் என்ற நபரை கைது செய்தனர். இவர் தனியார் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், சைப் அலிகானின் வீடுகுபுகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார். அவரிடம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. நடிகர் தங்கியிருந்த வீட்டின் பாதுகாப்பு குறைபாடுகே, மர்ம நபர் 7 வது மாடி வரை சென்று தாக்குதல் நடத்த முதற்கட்ட காரணமாக அமைந்துள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.