Goat Gives Birth to baby with human Face: மனிதன், நாய் தோற்றத்துடன் குட்டியை ஈன்ற ஆடு; வினோத நிகழ்வால் வியந்துபோன கிராம மக்கள்.!

உலகில் வினோதமான பல நிகழ்வுகள் நடந்து வருவது, தற்போதைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆதாரத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், மனிதன் மற்றும் நாயின் முகத்தை ஒத்தவாறு, ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்து இறந்துள்ள சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து இருக்கிறது.

Baby Goat with Human Face (Photo Credi: @TV9Marathi X)

ஜூலை 07, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திரபூர் மாவட்டம், செக் போரடி கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர், சொந்தமாக வீட்டில் ஆடு, மாடு உட்பட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரின் வீட்டில் இருந்த ஆடு ஒன்று கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று குட்டியை ஈன்றுள்ளது. மொத்தமாக 2 குட்டிகளை ஆடு ஈன்ற நிலையில், ஒரு குட்டி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தது.

பிறந்து இறந்த வினோத ஆடு:

ஆனால், மற்றொரு ஆடு பார்க்க மனிதனின் முகம், நாய் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட வினோதமாக இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். மேலும், இந்த தகவல் ஊர் முழுவதும் தெரியவரவே, அவர்களும் நேரில் வந்து பார்த்தனர். ஆனால், ஆடு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. ஆக்கிரமிப்பில் இருந்த வீடு இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் மரணம்.! திருவள்ளூரில் சோகம்.! 

நல்லடக்கம் செய்யப்பட்டது:

வினோதமாக பிறந்த ஆடு மனிதன் முகம், நாய்குட்டி போல தாடி என வினோதமான முக அமைப்பு உருவத்துடன் பிறந்தது. இவ்வாறு வித்தியாசமாக பிறக்கும் உயிரினங்கள் சில நிமிடங்களில் இறக்கும் தருவாய் உள்ளதுபோல, தற்போது பிறந்த ஆடும் உயிரை இழந்தது. இதனால் ஆடு அதன் பராமரிப்பாளரின் வீட்டில் உள்ள தோட்டப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீடியோ உங்களின் பார்வைக்கு:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement