Thiruvallur Occupied Land Demolish Issue (Photo Credit: @Annamalai_K)

ஜூலை 07, கும்மிடிப்பூண்டி (Thiruvallur News): திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஜூலை 05ம் தேதி, அங்குள்ள கோட்டக்கரை பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து வாழ்ந்தவர்களின் வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். பாதுகாப்பு கருதி காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். இதனிடையே, பத்தாவது நிலத்தில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவர், அதிகாரிகள் வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியபோதிலும், தனது வீடு பறிபோகும் எண்ணத்தில் இருந்த ராஜ்குமார், உடலில் மண்ணெணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தார். தீ பற்றி எரிந்தவாறு ஆவேசத்துடன் வெளியே ஓடியும் வந்தார். Suicide due to Debt: ஊரைச்சுற்றி கடன் வாங்கிய கணவர்; 28 வயது மகனுடன் உயிரை மாய்த்த தாய்; கண்ணீரில் இளம் மனைவி.! 

ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பலி:

இதனைக்கண்டு அதிர்ந்த்துபோன காவல்துறையினர் மற்றும் பிற அதிகாரிகள் பதறிப்போயினர். ஒருவர் மட்டும் சுதாரித்து விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தார். பின் அவரை மீட்ட அதிகாரிகள், அவசர ஊர்தி உதவியுடன் ராஜ்குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 85% தீக்காயத்துடன் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே இவ்விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.