College Girl Gang Rape: காதலனை நம்பி ஏமாந்த மாணவி.. கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்.., 4 பேர் அதிரடி கைது..!

ஆந்திர பிரதேசத்தில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

College Girl Gang Rape: காதலனை நம்பி ஏமாந்த மாணவி.. கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்.., 4 பேர் அதிரடி கைது..!
Gang Rape (Photo Credit: Pixabay)

நவம்பர் 20, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தைச் (Visakhapatnam) சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், வம்சி என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி அன்று வம்சி, தனது காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். Minor Girl Dies By Heart Attack: 4 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

அப்போது, இவர்களுடைய அந்தரங்க காட்சிகளை வம்சி உதவியுடன் அவரது நண்பர்கள், தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். வம்சி உதவியுடன் நண்பர்கள் 3 பேர், மாணவியிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு (Sexual Assault) ஆளான அவர், மிகுந்த மன உளைச்சல் அடைந்தார். இந்நிலையில், மாணவி நேற்று முன்தினம் (நவம்பர் 18) தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, மாணவியின் தந்தை அவரை காப்பாற்றி விசாரித்துள்ளார்.

இதனையடுத்து, மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தந்தையிடம் அழுதபடி கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வம்சி மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).