நவம்பர் 20, கம்மம் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் (Khammam) உள்ள எம்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதி வினோத்-லாவண்யா. இத்தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (வயது 4). இந்நிலையில், லாவண்யா நேற்று முன்தினம் (நவம்பர் 18) குரூப்-3 அரசுப் பணிக்கான தேர்வு எழுதச் சென்றுள்ளார். அப்போது, சிறுமி பிரஹர்ஷிகா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். லாவண்யா தேர்வு எழுதிவிட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். Jharkhand Elections 2024 Phase 2: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை வாக்குப்பதிவு.. நிலவரம் என்ன?!
அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தனது தாயை பார்த்து விட்டு, மகிழ்ச்சியுடன் அம்மா என அழைத்தவாறு அவரை நோக்கி ஓடினார். சிறுமி, வழியிலேயே வீட்டின் வாசலில் திடீரென மயங்கி விழுந்தார். இதனைப்பார்த்த லாவண்யா ஓடிச் சென்று மகளை தூக்கினார். அவரிடம், நெஞ்சு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியை மீட்டு உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் (Heart Attack) உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.