ஜூலை 26, டெல்லி (Delhi Metro): இந்தியாவின் தலைநகரான டெல்லியில், மக்களின் தேவை மற்றும் விரைவு போக்குவரத்தை உறுதி செய்ய டெல்லி மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இவை மக்களின் விரைவு பயண சேவைக்கு பேருதவி செய்கிறது. நாளொன்றுக்கு டெல்லி மெட்ரோவை 2.5 மில்லியன் மக்கள் உபயோகம் செய்கின்றனர். வார இறுதிகளில் டெல்லி மெட்ரோ நிரம்பி வழியும்.
சமீபமாக டெல்லி மெட்ரோவில் சர்ச்சைக்குரிய முத்தம், ஆபாச நடனம், கவர்ச்சி செயல்பாடுகள், உடலுறவு போன்ற விஷயங்கள் நடந்ததன் காணொளி வெளியாகி இருந்தன. இவை சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் பயணி பிச்சையெடுக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. மெட்ரோவை பொறுத்தமட்டில் அதன் பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக டிக்கெட் இன்றி பயணிப்பது எளிதல்ல என்ற நிலைமை உள்ளது. Thisaiyanvilai Murder: தங்கையை கிண்டலடித்து 19 வயது இளைஞர் கொடூர கொலை; உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பயங்கரம்.!
இவ்வாறான தருணத்தில் முதியவர் டெல்லி மெட்ரோவில் டிக்கெட் எடுத்து வந்து பயணிகளிடம் பிச்சை எடுக்கிறார். பொதுவாக புறநகர் இரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் யாசகம் பெற்று பிழைப்போர் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் மெட்ரோவை ஒருவர் தேர்வு செய்துள்ளார்.
இந்த விடியோவை இளைஞர் டெல்லி மெட்ரோ அதிகாரிகளுக்கு ட்விட்டர் வாயிலாக தெரியப்படுத்த, அவர்கள் மெட்ரோ இரயில் பெட்டியின் நம்பரை சேர்த்து இணைத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என கோரிக்கை வைக்கின்றனர்.
ஒருவேளை இது ரீல்ஸ் மோகத்தில் இருக்கும் நபர்கள் வேண்டும் என்றே விளம்பரத்திற்காக பிச்சை எடுப்பது போல நடித்து வீடியோ எடுத்தாரா? அதனை தவறுதலாக பயணி படமெடுத்து பதிவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
This video depicted a person engaged in begging from the passengers on the Delhi Metro. The video quickly spread across social media platforms, drawing significant attention and reactions from viewers.https://t.co/bTLcFIQ3JS#DMRC | #DelhiMetro | #DelhiNCR pic.twitter.com/a4IG7Yzo0H
— DNA (@dna) July 26, 2023