Thisaiyanvilai Murder: தங்கையை கிண்டலடித்து 19 வயது இளைஞர் கொடூர கொலை; உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பயங்கரம்.!

அன்பு தங்கையை அடிக்கடி கிண்டல் செய்த இளைஞன் 3 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் திசையன்விளையை அதிரவைத்துள்ளது.

Thisaiyanvilai Murder: தங்கையை கிண்டலடித்து 19 வயது இளைஞர் கொடூர கொலை; உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பயங்கரம்.!
Accuse Suresh | Crime File Pic (Photo Credit: Facebook / Pixabay)

ஜூலை 26, திசையன்விளை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, அப்புவிளை பகுதியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ஸ்வாமிதாசின் மகன் முத்தையா (வயது 19). அங்குள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 19). இவரின் உறவினர்கள் பிரகாஷ் (வயது 31), மதியழகன் (வயது 31).

சமீபத்தில் முத்தையா மர்ம கும்பலால் கொலை அங்குள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், தகவல் அறிந்த திசையன்விளை காவல் துறையினர், முத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், 3 பேர் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதாவது, சம்பவத்தன்று இரவு முத்தையா தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் மதுபானம் அருந்தி இருக்கிறார். Kamal Hassan: 40 ஆண்டுகள் பாலிய நண்பரை நேரில் சந்தித்த நடிகர் கமல் ஹாசன்; இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு.!

Crime File Picture (Photo Credit: Pixabay)

அப்போது, சுரேஷ் தனது உறவினர்கள் இரண்டு பேருடன் அங்கு வந்து, எனது தங்கையை கிண்டல் செய்ய நீ யார்? என வாக்குவாதம் செய்துள்ளார். முத்தையா மதுபோதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றவே, சுரேஷ் முத்தையாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த கார்த்திக் கத்தி குத்து காயத்துடன் தப்பி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக சுரேஷ் மற்றும் அவரின் உறவினர்களான பிரகாஷ், மதியழகன் ஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

முத்தையாவின் மரணம் தொடர்பான விவகாரத்தில் ஜாதிய பிரச்சனை எழுந்த நிலையில், அவை குறித்த எந்த சர்ச்சையும் இங்கு நடைபெறவில்லை. தங்கையை கிண்டல் செய்ததால் அண்ணன் கண்டிக்க சென்று கொலையில் நிகழ்வு முடிந்துள்ளது என காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).