Auto-Lorry Accident: ஆட்டோ - லாரி கோர விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!
உத்தர பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி பயங்கரமாக மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 02, லக்னோ (Uttar Pradesh): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டம், கார்வி பகுதியில் நேற்று நள்ளிரவு ஆட்டோ ஒன்று 8 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது, அதிவேகமாக வந்த லாரி ஆட்டோ (Auto Accident Death) மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. Terrible Fire Accident In Forest: காப்புக்காட்டில் பயங்கரமான தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்..!
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பிரயாக் ராஜு என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும், சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் (வயது 20) மற்றும் சுமித் (வயது 14) ஆகியோர் மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பயங்கரமான இந்த விபத்தில் அனிருத் (வயது 30), அதர் சிங் (வயது 50), தர்மேந்திர சோனி (வயது 30), நிதி சோனி மற்றும் அகிலேஷ் (வயது 22) ஆகியோர் பலியாகியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 05:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

