ஏப்ரல் 02, விருத்தாசலம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி செல்லும் வழி சாலையில் காப்புக்காடு இருக்கின்றது. இதில் நேற்று மாலை திடீரென கார்மாங்குடி காப்புக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டு (Many Acres Trees Burnt In The Fire) மரங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்துள்ளது. Banana Stem Buttermilk Concoction: உடலுக்கு அதிக சத்து தரக்கூடிய வாழைத்தண்டு மோர் கூட்டு செய்வது எப்படி?- விவரம் உள்ளே..!
இதைப் பற்றி தகவல் அறிந்த வந்த விருத்தாசலம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இரவு 8 மணியளவில் தீயை அணைத்து விட்டனர். பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் அனைத்தும் தீ விபத்தில் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நேற்று திடீரென விருத்தாசலம் அருகே பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழே கிடந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தீ விபத்து பற்றி அறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.