College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

ஆந்திர பிரதேசத்தில் கல்லூரி சீனியர் ராக்கிங் செய்ததால், கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
College Student Suicide (Photo Credit: @TeluguScribe X)

ஆகஸ்ட் 13, நெல்லூர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூர் (Nellore) மாவட்டத்தில் அமைந்துள்ள நாராயணா மருத்துவக் கல்லூரியில், மாணவர் ஒருவர் கட்டிடத்தில் மேலிருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், அனந்தபூரைச் சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் அந்த கல்லூரியில் பிடிஎஸ் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். Bengaluru Bus Goes Out of Control: திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. வரிசையாக இடித்துத்தள்ளப்பட்ட வாகனங்கள்.. வைரலாகும் வீடியோ..!

அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் (MBBS) படித்து வந்த ராகுல் என்ற மாணவர், பிரதீப்பை ராக்கிங் செய்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலை செய்துகொள்வதற்கு முன், தனது மூத்த சகோதரருக்கு ராகுல் என்ற மாணவர் தான் என தற்கொலைக்கு காரணம் என மெசேஜ் அனுப்பிட்டு, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).