ஆகஸ்ட் 13, பெங்களூரு (Karnataka News): கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று காலை, பரபரப்பான நகர சாலையில் திடீரென வால்வோ பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சுமார் 10 வினாடிகளுக்கு முன்னால் சென்ற வாகனங்கள் மீது பேருந்து மோதிக்கொண்டே இருந்தது. இதில் முன்னால் சென்ற இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கார்களும் மோதின. இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர், மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் முழுவதும் பேருந்தில் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பஸ் ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்று ஓட்டுநருக்கு புரியவில்லை என்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. நடத்துனர் ஓட்டுநரிடம் வந்து பிரேக் போடச் சொல்கிறார். ஓட்டுநர் பிரேக் போட்டாலும் பேருந்து நிற்கவில்லை. இதையடுத்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். DRDO Successfully Tests Anti-Tank Missile: இந்தியாவின் புதிய சாதனை.. ஏவுகணை சோதனை வெற்றி.. சாதித்து காட்டிய டிஆர்டிஓ!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)