Counterfeiter Has Thrown Acid: பெண் நடத்தையில் சந்தேகம்; கள்ளக்காதலன் ஆசிட் வீசி தப்பி ஓட்டம்..!
கர்நாடகாவில் பெண் நடத்தையில் சந்தேகம் எழுந்து, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஆசிட் வீசி அங்கிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 29, பாகல்கோட்டை (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம், கலடகி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கடனகேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது கணவரை பிரிந்து, 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், மவுனேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும், மவுனேசுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 5 People Arrested For Selling Ganja: வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை; பீகாரை சேர்ந்த சிறுவன் உட்பட 5 பேர் கைது..!
இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லட்சுமியின் நடத்தையில் சந்தேகம் எழுந்து, இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக, ஒரு வாரத்திற்கு முன் மவுனேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால், மவுனேஷ் செல்போன் எண்ணை லட்சுமி 'பிளாக்' (Block) செய்துள்ளார். இதனிடையே, லட்சுமியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மவுனேஷ் வந்துள்ளார். அப்போது, லட்சுமி கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவர் தான் வைத்திருந்த ஆசிட்டை (Acid) ஜன்னல் வழியாக அவர் மீது வீசியுள்ளார். பின்னர், அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.
ஆசிட் அவர் மீது பட்டதில் லட்சுமியின் இடது கண் மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவர் அருகில் இருந்த அவரது 8 வயது மகளுக்கும் காயம் உண்டானது. இதுதொடர்பாக, கலடகி காவல்நிலையத்தில் லட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கள்ளக்காதலன் மவுனேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 29, 2024 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

