Arrest (Photo Credit: Pixabay)

மே 29, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கஞ்சா (Cannabis) விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க, மாநகர காவல்துறை கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில், தனிப்படை குழு அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். Father Suicide In Premature Baby Death: 7 மாதத்தில் பிறந்த குழந்தை இறப்பு; மன வேதனையில் தந்தை தற்கொலை..!

இந்நிலையில், திருப்பூரில் உள்ள பொம்மநாயக்கன்பாளையம் பவானிநகர் பகுதியில், உதவி கமிஷனர் அனில்குமார் மேற்பார்வையில் வடக்கு காவல் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான காவல்துறையினர் நேற்று தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வடமாநில இளைஞர்கள் தங்கியிருந்து கஞ்சா போதை பொருட்களை விற்பனை (Ganja Sale) செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் 5 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதில் விர்ஜிகுமார் (வயது 25), அபினேஷ்குமார் (வயது 23), ரோஷன் குமார் (வயது 20), சன்னி (வயது 19) ஆகிய 4 இளைஞர்களும் 17 வயது சிறுவன் ஒருவரும் இருந்துள்ளனர். மேலும், இவர்களிடம் இருந்து 18 1/2 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணையில், பீகாரில் இருந்து வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து திருப்பூரில் விற்பனை செய்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.