Young Girl Murder: பெண்கள் விடுதிக்குள் புகுந்து 24 வயது இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்..!

பெங்களூருவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து, இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young Girl Murder: பெண்கள் விடுதிக்குள் புகுந்து 24 வயது இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்..!
Young Woman Murder In Bengaluru (Photo Credit: @ItsKhan_Saba X)

ஜூலை 26, பெங்களூரு (Karnataka News): பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருத்தி குமாரி (வயது 24) என்ற இளம்பெண், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர், பெங்களூரு கோரமங்களாவில் உள்ள வி.ஆர். குடியிருப்பில் உள்ள விடுதியில் தங்கி இருந்து பணிக்கு சென்றுள்ளார். Teenager Fall From Train Stairs: படியில் தொங்கியவாறு இரயில் பயணம்; தவறி விழுந்த இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ..!

இந்நிலையில், கடந்த ஜூலை 19-ஆம் தேதி அன்று, மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன், இரவு 11 மணியளவில் கிருத்தி தங்கியிருக்கும் விடுதியில் (Girls Hostel) வளாகத்தினுள் புகுந்துள்ளார். அங்கு 3-வது மாடியில் கிருத்தி குமாரி தங்கியிருக்கும் அறையை நோக்கி சென்ற மர்ம நபர், அவரின் கழுத்தை அறுத்து படுகொலை (Murder) செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதியில் தங்கியிருந்த மற்ற பெண்கள், இதுகுறித்து கோரமங்களா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. இருப்பினும், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).