Teenager Fall From Train Stairs: படியில் தொங்கியவாறு இரயில் பயணம்; தவறி விழுந்த இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ..!

மும்பையில் ரயில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த வாலிபர் ஒருவர் தவறி விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Teenager Fall From Train Stairs: படியில் தொங்கியவாறு இரயில் பயணம்; தவறி விழுந்த இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ..!
Teenager Fall From Train in Mumbai (Photo Credit: @MumRail X)

ஜூலை 26, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகர் ரயிலில் தினம்தோறும், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இதில், காலை மற்றும் மாலை அளவுக்கு அதிகமான பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இதன்காரணமாக ரயிலில் வெளியே படிக்கட்டுகளில் (Train Stairs) ஆபத்தான நிலையில், பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்தவகையில், ரயிலின் படிக்கட்டுகளில் மூடிய கதவுகளின் வெளியே ஆபத்தான முறையில் தொங்கி கொண்டு பயணம் செய்த வாலிபர், அருகே இருந்த மின்கம்பத்தில் உரசி கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது. அதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Minor Girl Rape: துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமி பலாத்காரம்; மாடியில் இருந்து தள்ளிவிட்டு, தப்பியோடிய மர்ம நபர்..!

(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 01:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).