Teenager Dies: நாய் துரத்தியதால் பரிதாபம்.. 3-வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பலி..!

ஆந்திர பிரதேசத்தில் ஓட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிடச் சென்ற வாலிபரை, நாய் துரத்தியதால் தப்பிக்க முயன்ற வாலிபர் 3-வது மாடியில் இருந்து குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Dies: நாய் துரத்தியதால் பரிதாபம்.. 3-வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பலி..!
Dog (Photo Credit: Pixabay)

அக்டோபர் 22, ஐதராபாத் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், தெனாலியை சேர்ந்தவர் உதய் (வயது 23). இவர், ஐதராபாத்தில் (Hyderabad) உள்ள ராமசந்திராபுரம் அஷோக் நகரில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (அக்டோபர் 20) இரவு, உதய் தனது நண்பர்களுடன் சந்தாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். நண்பர்கள் அனைவரும் அந்த ஓட்டலின் 3-வது மாடிக்கு சாப்பிட சென்றனர். அப்போது, அங்கிருந்த நாய் (Dog) ஒன்று, இவரை பார்த்ததும் குரைத்துக்கொண்டே அவரை துரத்தியது. Cylinder Explosion: சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. பலர் படுகாயம்..!

ஏற்கனவே, சிறு வயது முதலே நாய்கள் என்றால் பயம் கொண்டுள்ள உதய், நாய் துரத்தி வருவதை பார்த்து பயந்து போய் ஓட்டலின் பால்கனியில் (Hotel Balcony) ஓடியுள்ளார். நாய் துரத்தி கொண்டே வந்ததை பார்த்து, உடனே அங்குள்ள ஒரு ஜன்னலை திறந்து, அதன் வழியாக கீழே குதித்துள்ளார். அது 3-வது மாடி என்பதால், நேராக சாலையில் விழுந்த உதய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆனால், இதனை ஓட்டல் நிர்வாகம் மறைத்து விட்டது. நேற்று உயிரிழந்தவரின் நண்பர்கள் தெரிவித்த தகவலின்பேரில், உண்மை வெளியே தெரியவந்தது. இதுகுறித்து தற்போது சந்தாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).