ஆகஸ்ட் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடல் சேது (Atal Setu Bridge) என்ற பாலம் அமைந்துள்ளது. கடல் மீது அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பு தடுப்பு மீது இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஓட்டுநர், அவரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு, அந்த பெண்ணிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அந்த பெண் ஏற்கனவே தற்கொலை (Suicide Attempt) செய்யும் நோக்கில் இருந்துள்ளார். Father Kills Daughter: மாற்று சமூக வாலிபரை காதலித்த இளம்பெண்; கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை..!
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக அந்த இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்தார். அப்போது, கார் ஓட்டுநர் அந்த பெண்ணின் தலை முடியை பிடித்துக்கொண்டார். உடனே, ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அங்கு வந்து அந்த இளம்பெண்ணை பத்திரமாக மீட்டனர். கார் ஓட்டுநரின் துரித முயற்சியால், இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற பெண் ரீமா முகேஷ் படேல் என்பது தெரியவந்தது. இவர், மும்பையின் வடகிழக்கில் உள்ள புறநகர் பகுதியான முலுண்டில் வசித்து வருகிறார். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை, கார் ஓட்டுநர் மற்றும் காவல்துறையினர் இணைந்து காப்பாற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
సీసీటీవీ ఫుటేజ్.. ఆత్మహత్యాయత్నానికి పాల్పడిన మహిళను కాపాడిన పోలీసులు
ముంబై - అటల్ సేతు బ్రిడ్జిపై నుండి దూకి ఓ మహిళ ఆత్మహత్యాయత్నానికి ప్రయత్నించింది.
సకాలంలో అక్కడికి చేరుకున్న ట్రాఫిక్ పోలీసులు ఆ మహిళ దూకుతుండగా పట్టుకొని కాపాడారు. pic.twitter.com/Ny9I1eqBpe
— Telugu Scribe (@TeluguScribe) August 16, 2024