Father Kills Daughter: மாற்று சமூக வாலிபரை காதலித்த இளம்பெண்; கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை..!

மத்திய பிரதேசத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த மகளை, அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Father Kills Daughter: மாற்று சமூக வாலிபரை காதலித்த இளம்பெண்; கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை..!
Love Couple | Crime File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 17, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் (Gwalior) மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா (வயது 19). இவர், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூக வாலிபரான நரேந்திர ஜதேவை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் (Love Affair) சஞ்சனாவின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதற்கு அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. Kolkata Doctor Rape & Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை; நாடுதழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டம்.!

இந்நிலையில், நேற்று இதுதொடர்பாக சஞ்சனாவிற்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது மகள் சஞ்சனாவின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறையினர், சஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அவரது தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).