Weaver Dies By Suicide: பொருளாதார நெருக்கடியால் நெசவாளர் தற்கொலை.. தொடரும் சோக சம்பவங்கள்..!

தெலுங்கானாவில் வேலை கிடைக்காததால் நிதி நெருக்கடியால் நெசவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Weaver Dies By Suicide: பொருளாதார நெருக்கடியால் நெசவாளர் தற்கொலை.. தொடரும் சோக சம்பவங்கள்..!
Weaver Dies By Suicide (Photo Credit: @TeluguScribe X)

நவம்பர் 13, சிரிசில்லா (Telangana News): தெலுங்கானா மாநிலம், சிரிசில்லா (Sircilla) மாவட்டத்தை சேர்ந்த தம்பதி எர்ரம் கொம்ரய்யா (வயது 55) - கமலா. இவர்களுக்கு ஸ்ரீகாந்த், சாய்கிரண் என்ற இரு மகன்களும், வரலட்சுமி என்ற மகளும் உள்ளனர். நெசவாளரான (Weaver) கொம்ரய்யா கடந்த 8 மாதங்களாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டார். Union Bank Recruitment 2024: பிரபல வங்கியில் 1500 காலிப்பணியிடங்கள்.. நாளை இறுதி நாள்.. இப்பவே விண்ணப்பிங்க..!

இந்நிலையில், வேலை கிடைக்காததால் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்த அவர் திடீரென தற்கொலை (Suicide) செய்து கொண்டார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிரிசில்லாவில் மேலும் ஒரு நெசவாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).