Jobs (Photo Credit: Pixabay)

நவம்பர் 12, புதுடெல்லி (New Delhi): இந்தியா முழுவதும் எச்டிஎப்சி, ஆக்சிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகளோடு 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளூர் வங்கி அதிகாரி (local bank officer) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

தேர்வு அறிவிப்பு: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் தேர்வுகள் நடைபெறும். Boy Dies By Dog Bite: நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!

பணியிடங்கள்: யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியை பொறுத்த வரை, மும்பையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 8500 கிளைகள் இயங்கி வருகிறது. சுமார் 75,000 ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதிகள் என்னென்ன?: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 முதல் 30வயது உடையவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.175 ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பிப்பதற்கு https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx இந்த என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் நவம்பர் 13ஆம் தேதிஆகும்.