Wife Kills Husband: குடும்ப தகராறில் கணவன் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!

கர்நாடகாவில் குடும்ப தகராறில் மனைவி தனது கணவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife Kills Husband: குடும்ப தகராறில் கணவன் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!
Crime Murder (Photo Credit: Pixabay)

அக்டோபர் 15, குடகு (Karnataka News): கர்நாடக மாநிலம், குடகு (Kodagu) மாவட்டம் குஷால்நகரை சேர்ந்த தர்மா (வயது 26) என்பவரும், பைரம்பாடா கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஜா என்பவரும் காதலித்து திருமணம் (Love Marriage) செய்து கொண்டனர். தம்பதி இருவரும் விராஜ்பேட்டை தாலுகாவின் மூர்நாடுவின் காந்திநகரில் வசித்து வந்துள்ளனர். Muthyalamma Temple Idol Vandalised: முத்தியாலம்மா கோயில் அம்மன் சிலை சேதம்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு (Family Dispute) ஏற்பட்டது. நேற்று முன்தினம் (அக்டோபர் 13) இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஸ்ரீஜா தனது கணவனை கத்தியால் குத்தியதில் (Murder) அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்ரீஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).