Woman Dies: கர்ப்பிணி பெண்ணுக்கு லிப்டில் காத்திருந்த எமன்.. கேபிள் அறுந்து நடந்த சோகம்.., மீளாத்துயரில் குடும்பத்தினர்..!
உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் லிப்டின் பெல்ட் அறுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 09, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த கரிஷ்மா என்ற பெண் அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக (Childbirth) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிது நேரத்தில் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, அவரை பொது அறைக்கு மாற்றியுள்ளனர். அப்போது, அவர் லிப்டில் (Lift) சென்றபோது பெல்ட் அறுந்து விபத்துக்குள்ளானது. Police Shot Dead: சக காவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தலைமை காவலர் தற்கொலை.. நடந்தது என்ன..?
இந்த விபத்தில் கரிஷ்மாவின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருப்பினும், தீவிர சிகிச்சை பலனின்றி கரிஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். இதனிடையே அங்கிருந்த மருத்துவர்களும், ஊழியர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Dec 09, 2024 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

