Gun File pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 09, உதம்பூர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் (Udhampur) உள்ள சோபோரில் இருந்து ரியாசி மாவட்டம் தல்வாராவில் உள்ள பயிற்சி மையத்துக்கு நேற்று முன்தினம் (டிசம்பர் 07) காவலர்கள் பயிற்சிக்காக வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த தலைமை காவலருக்கும், வாகன ஓட்டுரான மற்றொரு காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  School Boy Suicide Attempt: ரேகிங் கொடுமையால் பயங்கரம்; ஆறாம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி.!

இதனையடுத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தலைமை காவலர் தன்னிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் வாகன ஓட்டுநரை சுட்டுக் (Shot Dead) கொன்றுள்ளார். பின்னர், தலைமை காவலரும் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலை (Suicide) செய்துகொண்டுள்ளார். மேலும், அந்த வாகனத்தில் சென்ற மற்றொரு காவலர் எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.