Woman Beaten To Death: கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; இளம்பெண் கொடூர கொலை..!
தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 06, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி (Rangareddy) மாவட்டம், எல்பி நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவ கங்கா காலனியை சேர்ந்தவர் சரோஜினி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நரசம்மா என்பவரிடம் ரூ. 20 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 02-ஆம் தேதி அன்று, நரசம்மா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். Woman Catches Husband With Female Inspector: கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த போலீஸ் கணவரை பஞ்சராக்கிய மனைவி; தோழிக்கும் பஞ்ச் விட்டதால் வழக்குப்பதிவு..!
அப்போது, இருவருக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரோஜினி, வீட்டில் இருந்த சுத்தியலை (Hammer) எடுத்து நரசம்மாவின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரோஜினி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

