ஏப்ரல் 05, பெங்களூரு (Karnataka News): கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 55 பெண், கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நெடுநேரமாகியும், வீட்டிற்கு வராததால் அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடி வந்துள்ளனர். Family Commits Suicide Jump Infront of Train: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை – காவல்துறையினர் விசாரணை..!

இந்நிலையில், அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நேற்று முன்தினம் அவர் நிர்வாண நிலையில் கொலை (Naked Woman Dead Body) செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து, உடனடியாக அம்ருதஹள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சம்பவ நாள் அன்று மதுக்கடையில் மது வாங்கி குடித்துள்ளார். அப்போது அந்த பெண்ணும் அங்கு மது அருந்தியுள்ளதை கண்ட வாலிபர், பெண் தனியாக செல்லும்போது அவர் பின் சென்று கடத்தி தூக்கிச் சென்று கற்பழித்து, கழுத்தை நெரித்து அடித்து கொலை செய்துள்ளது தெரிய வந்தது. குடிபோதையில் இருந்த அந்த வாலிபர், பெண்ணை கற்பழித்து கொலை செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.