Family Commits Suicide Jump Infront of Train: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை - காவல்துறையினர் விசாரணை..!

கோயம்புத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Family Commits Suicide Jump Infront of Train: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை - காவல்துறையினர் விசாரணை..!
Death | Railway Track (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 05, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சுண்டாபுரத்தை அடுத்து உள்ள வெங்கிட்டாபுரம் அருகே நேற்றைய தினம் தண்டவாளத்தின் அருகே மூன்று பேரின் சடலம் (Suicide By Jumping In Front Of Train) கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. Himachal Pradesh Earthquake: ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி.! வைரல் வீடியோ உள்ளே.!

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு கிடந்த மூன்று பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இறந்து கிடந்த 3 பேரும் யார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தண்டவாளத்தின் அருகே அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் ஒரு பை கண்டறியப்பட்டது. அதில், சென்னையில் உள்ள அடையாறு பகுதியில் வசித்து வந்த வரலட்சுமி (வயது 45), மகன் யுவராஜ் (வயது 16), மகள் ஜனனி (வயது 15) என தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்த விசாரணையில், நேற்று காலை இவர்கள் மூன்று பேரும் கோவிலுக்கு செல்வதாகக் கூறி போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் தண்டவாளம் வழியாக, வெங்கிட்டாபுரம் அருகே நடந்து செல்லும் போது, அந்த வழியாக வந்த ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூவரும் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்து ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).