Women Burnt To Death: பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை – கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
கள்ளத்தொடர்பில் ஏற்பட்ட சண்டையினால் கள்ளக்காதலன் தீ வைத்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.
மார்ச் 07, திருவனந்தபுரம் (Kerala News): திருவனந்தபுரம் அருகேயுள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்த சரிதா (வயது 46). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவருடைய கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சரிதாவும், அவருடைய மகளும் தனியாக வசித்து வந்தனர். Earthquake Hits China: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பீதியடைந்த மக்கள்..!
கள்ளத்தொடர்பு: பவடிக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான பினு (வயது 50). இவருக்கும் சரிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பினுவுடனான தொடர்பை சரிதா விட்டு விலகிக்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், பினு மீண்டும் சரிதாவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அவர் கொண்டுவந்திருந்த பெட்ரோலை திடீரென சரிதாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. எதிர்பாராதவிதமாக பினுவின் உடலிலும் தீ புடித்து எரிய துவங்கியது. உடனே அவர் அங்கிருந்த கிணற்றில் குதித்துள்ளார்.
தீவிர சிகிச்சை: இது குறித்து தகவல் அறிந்த சேங்கோட்டுகோணம் காவல்துறையினர் விரைந்து வந்து சரிதாவையும், பினுவையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கு கொண்டு சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். பினு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 07, 2024 09:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

