மார்ச் 13, மகாராஷ்டிரா (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலம் கேஎம்சி சௌக்-பெளசிங்ஜி சாலையில் அங்கு இருந்த தெருநாய் கிட்டத்தட்ட 20 பேரை கடித்துள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி 3-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் கடிபட்டவர்களில் ஒருவர்தான் ஷிண்டே (வயது 21). இவர் கோலாப்பூரில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை ஒரு கிராஃபிக் டிசைனர். Naked Dead Body: வீட்டிற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம் – அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள்..!
சம்பவ நாள் அன்று ஷிண்டே வெளியில் செல்லும் போது, அங்குள்ள நாய் இவரின் காலை கடித்துள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து, தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். நாய்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அறிக்கையில், “ரேபிஸ் தடுப்பூசிக்கு செலுத்தப்படும் 5 டோஸ்களையும், நோய் எதிர்ப்பு சக்திக்காக ஆண்டி-ரேபிஸ் சீரம் என்ற மருந்தினை அவர் சரியாக எடுத்து வந்துள்ளார்.” என தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை அன்று காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், பரிசோதனை செய்து வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது. தடுப்பூசி செலுத்திய போதும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.