Naked Dead Body: வீட்டிற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம் – அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள்..!
ஒசூரில் உள்ள ஒரு குடியிருப்பில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலத்தை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மார்ச் 13, கர்நாடகா (Bengaluru News): கர்நாடக மாநிலம் எல்லையில் அத்திப்பள்ளி அருகேயுள்ள தலைமை ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 4-வது தளத்தில் உள்ள ஒரு அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இந்தநிலையில், அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சந்தேகமடைந்து 4-வது தளத்திற்குச் சென்று பார்த்தபோது, வீடு பூட்டிய படி இருந்தது. மேலும், சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே படுக்கை அறையில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். Bus Driver Saves Passengers: துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் – பயணிகளை பாதுகாத்த காவல் தெய்வமாக ஓட்டுநர்.!
உடனடியாக, காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணையில், ஒரிசாவைச் சேர்ந்த சப்பன் குமார் மற்றும் உயிரிழந்த பெண்ணும் ஒன்றாக இங்கே வசித்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் சப்பன் குமார் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், செல்போன் எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும், இந்த சம்பவம் குறித்து சப்பன் குமாரை பிடிக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 13, 2024 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

