மே 06, ராம்கார் (Jharkhand News): ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலக்கரியை சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ளது. இங்குள்ள மறைவான பகுதிக்கு 19 வயது இளம்பெண்ணை, 4 சிறுவர்கள் இழுத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளனர். JADEJA COLLECTION OF AWARDS: கையெல்லாம் விருதுகள்; மாஸ் காண்பித்த ஜடேஜா.. விபரம் உள்ளே.!

இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்துள்ளது. இதுபற்றி அவர் வெளியில் யாரிடமும் கூறவில்லை. இதனையடுத்து, கடந்த 3-ஆம் தேதி அவர்கள் 4 பேரும் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து, ராம்கார் காவல் அதிகாரி விமல் குமார் அவருக்கு தெரிய வந்துள்ளது. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரும் 15 முதல் 17 வயது உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் இதுபற்றி வெளியே கூறினால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால் அவர் இதுபற்றி காவல்துறையினரிடன் இதுவரை புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இளம்பெண்ணின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ள அந்த 4 சிறுவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.