மே 06, தர்மசாலா (CRICKET NEWS): ஐபிஎல் 2024 கிரிக்கெட் (IPL 2024) தொடரின் 53வது ஆட்டம், நேற்று தர்மசாளா கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களின் ருத்ராஜ் 21 பந்துகளில் 32 ரன்னும், மிட்சல் 19 பந்துகளில் 30 ரன்னும், மொயின் அலி 20 பந்துகளில் 17 ரன்னும், ஜடேஜா 26 பந்துகளின் 43 ரென்னும் அடித்து அசத்தியிருந்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். பந்துவீச்சை கூட்டம் பொறுத்தமட்டில் பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஹர்சல், ராகுல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார். Agni Nakshatram 2024: கிருத்திகை நட்சத்திரத்தின் வழியாக சூரியன் செல்லும் காலம்; அக்னி நட்சத்திரத்தின் பின்னணி.! 

போராடி திணறித்தோற்ற பஞ்சாப்: இதனையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரப்ஹசிம்ரன் 23 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். எஞ்சிய பிற வீரர்களும் அடுத்தடுத்து சொற்பு ரன்களில் வெளியேறியதால், அணி தனது இலக்கை எட்ட இயலாமல் தவித்தது. ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி தனது வெற்றியை பறிகொடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜடேஜா மகிழ்ச்சி: இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஜடேஜா தான் வீசிய நான்கு ஓவரில் மூன்று விக்கெட்டை எடுத்து எதிரணியை 20 ரன்கள் மட்டுமே அடிக்க வழிவகை செய்திருந்தார். இதனால் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜாவுக்கு சிறந்த பந்துவீச்சாளர், மட்டைப்பந்து ஆட்டக்காரர், விக்கெட்டை எடுத்தவர் என பல விருதுகள் வழங்கப்பட்டது. அத்தனை விருதுகளையும் பெற்றுக் கொண்ட ஜடேஜா, அமைதியாக தனது அறை நோக்கி நடந்து சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வரலாகி வருகிறது.

மாஸ் காட்டிய ஜடேஜாவின் அதிரடி செயல்: