சகோதரியின் கழுத்தை நெரித்து, கைகால்களை உடைத்து கொடூர கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!
உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தனது சகோதரியின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 30, கோரக்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் கோரக்நாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நயா கிராமத்தில், ஒரு வாலிபர் தனது சொந்த சகோதரியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில், கொலைக்கான காரணம் பணத் தகராறு என்று கூறப்படுகிறது. "எனக்கு பிரேக்அப் ஆச்சு.. லீவு வேணும்" - மெயில் அனுப்பிய ஜென் இசட் ஊழியர்..!
சகோதரி கழுத்து நெரித்து கொலை:
தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ராம் ஆஷிஷ் நிஷாத் (வயது 32). அவரது தந்தை சின்கு நிஷாத் சமீபத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை பெற்றிருந்தார். ராம் ஆஷிஷ் தனது தந்தை பணத்தில் ஒரு பங்கைக் கேட்டார். ஆனால், அவரது தந்தை தனது மகளின் திருமணத்திற்கு பணத்தை செலவிட விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த ராம் ஆஷிஷ், அக்டோபர் 27ஆம் தேதி அன்று, வீட்டில் தனியாக இருந்த தனது சகோதரியின் கழுத்தை (Murder) நெரித்து கொன்றார். பின்னர், அவரது கைகால்களை உடைத்து, அவரது உடலை ஒரு சாக்குப்பையில் அடைத்து, பின்னர் அதை தனது பைக்கில் ஏற்றி சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் வீசினார். இதன்பின்னர், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

