Love Breakup | Gen Z Leave Application File Pic (Photo Credit: Pixabay | @jasveer10 X)

அக்டோபர் 30, குர்கான் (Haryana News): ஹரியானா மாநிலம், குர்கானைச் சேர்ந்த நாட் டேட்டிங்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வீர் சிங், தனது எக்ஸ் தளத்தில் தனக்குக் கிடைத்த "மிகவும் நேர்மையான விடுப்பு விண்ணப்பத்தை" பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், "ஜென் இசட்களுக்கு பொய் சொல்ல தெரியாது" என்று கருத்து தெரிவித்தார். இந்த சம்பவத்தை விவரித்த சிங், ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக விடுமுறை கேட்டு ஒரு ஊழியர் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறினார். காதல் முறிவுக்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்த சிரமப்படுவதாகவும், அதிலிருந்து வெளியேவர சில நாட்கள் தேவைப்படுவதாகவும் அவர் மெயில் அனுப்பினார். காதலனுடன் தப்பியோடிய மனைவி.. வழக்கறிஞரின் விவரீத முடிவால் சோகம்..!

வைரல் பதிவு:

நாட் டேட்டிங்கின் சிஇஓ வெளியிட்ட பதிவில் விடுப்பு விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட்டும் இருந்தது. அதில், "சமீபத்தில் எனக்கு ஒரு காதல் முறிவு ஏற்பட்டது. இதனால், தான் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை. நான் இன்று வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். அதனால் 28ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை விடுப்பு எடுக்க விரும்புகிறேன்." இதனையடுத்து, இப்பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது. பல பயனர்கள் பணியாளரின் நேர்மையைப் பாராட்டினர். ஒரு சில பயனர்கள் அவரது கோரிக்கையை அங்கீகரித்தாரா என்று கேட்டனர். தலைமை நிர்வாக அதிகாரி, "உடனடியாக ஒப்புதல் அளித்து விட்டேன்" என்று பதிலளித்தார். தற்போது, இப்பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நாட் டேட்டிங் சிஇஓ வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: