French Woman Rape Case (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 26, உதய்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் (Udaipur) சித்தோர்கரை சேர்ந்தவர் புஷ்பராஜ் என்கிற சித்தார்த் ஓஜா (வயது 29). இவர், நடிகர்கள் தேர்வு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். பாலிவுட் நடிகர்களுக்கு நடிகர்கள் தேர்வு செய்துள்ளார். நிறுவனத்தின் நடிகர்கள் தேர்வு அழைப்பின் பேரில், பிரெஞ்சுப் பெண் உதய்பூருக்கு படப்பிடிப்புக்காக வந்துள்ளார். போலி சாமியார் அதிரடி கைது.. 2 கிலோ கஞ்சா உட்பட போதை மாத்திரைகள் பறிமுதல்..!

இளம்பெண் பாலியல் பலாத்காரம்:

இந்நிலையில், கடந்த ஜூன் 22ஆம் தேதி அன்று, பிச்சோலா ஏரி, சஜ்ஜன்கர் கோட்டை போன்ற இடங்களில் அப்பெண்ணுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அன்று மாலையில், டைகர் ஹில்லில் அமைந்துள்ள ரெஸ்ட்ரோ கஃபேவில் விருந்து நடைபெற்றது. அப்போது, அவர் பிரெஞ்சு பெண்ணை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்ததாக கூறப்படுகிறது. இதன்பேரில், சித்தார்த் ஓஜாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3