Fake Priest Arrested (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 26, டோங்கர்கர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், டோங்கர்கர் (Dongargarh) புனித நகரத்தைச் சேர்ந்தவர் தருண் அகர்வால் (வயது 45). இவர், ஒரு சாமியார் வேடத்தில் ஆசிரமம் என்ற பெயரில் இன்ப விடுதி நடத்தி வந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, 2 கிலோ கஞ்சாவுடன் பாலியல் பொம்மைகள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல வகையான பாலியல் ஊக்க மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். Paracetamol Tablets: பாராசிட்டமால் மாத்திரைக்கு அதிரடி தடை.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

போலி சாமியார் கைது:

இதனைத்தொடர்ந்து, போலி சாமியார் தருண் அகர்வாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், யோகாவின் பெயரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளார். இவர், கோவாவில் 20 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இங்கும் அவர் ஒரு ஆசிரமத்தைக் கட்டியுள்ளார். ஆடம்பர வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தியுள்ளார். சாமியார் வேடமிட்டு, பாலியல் சம்மந்தமான செயல்களில் ஈடுபட்ட வந்த அவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.