Teenager Flirted With Girls: திருமண ஆசை வார்த்தை கூறி பல பெண்களுடன் உல்லாசம்; நகை, பணம் கொள்ளையடித்து வாலிபர் தப்பியோட்டம்..!

பெங்களூருவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி வாலிபர் ஒருவர் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, நகைகளுடன் தப்பிச்சென்றுள்ளார்.

Teenager Flirted With Girls: திருமண ஆசை வார்த்தை கூறி பல பெண்களுடன் உல்லாசம்; நகை, பணம் கொள்ளையடித்து வாலிபர் தப்பியோட்டம்..!
Girl Sad (Photo Credit: Pixabay)

ஜூலை 16, பெங்களூரு (Karnataka News): பீகார் மாநிலத்தை சேர்ந்த சோனுகுமார் (வயது 29) பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீனியாவை சேர்ந்த குஸ்மா என்ற இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் (Living Together) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். Lorry Driver Dies By Suicide: லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை; நண்பர்கள் 2 பேர் உயிரிழப்பு..!

இந்நிலையில், திடீரென குஸ்மாவுடன் சோனுகுமார் மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த குஸ்மா குடும்பத்தினர் பீனியா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சோனு குமார் பல பெண்களுடன் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும், தன்னுடன் சேர்ந்து வாழும் பெண்களிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின்னர் அவர்களது நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதும் கண்டறியப்பட்டது.

இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும், இந்த வழக்கை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள சோனு குமாரை பீனியா காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 11:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).