Lorry Driver Dies By Suicide: லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை; நண்பர்கள் 2 பேர் உயிரிழப்பு..!

கோயம்புத்தூரில் லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டபோது, உடனிருந்த அவரது நண்பர்கள் மீதும் தீப்பற்றி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lorry Driver Dies By Suicide: லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை; நண்பர்கள் 2 பேர் உயிரிழப்பு..!
Arson File pic (Photo Credit: Pixabay)

ஜூலை 16, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகேயுள்ள கொத்துக்கவுண்டன் புதூர் பகுதியில், தேனி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களில் அழகுராஜா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரி ஓட்டிச்செல்லும்போது விபத்து ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இதனால், அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். Worker Was Sentenced To Life Imprisonment: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

இந்நிலையில், நேற்றைய தினம் அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி (Arson) தீக்குளித்துள்ளார். அப்போது, பெட்ரோல் கேனை வீட்டில் தூக்கி போட்டுள்ளார். இதனால் வீட்டில் சுற்றி இருந்த மற்ற பொருட்கள் மீதும் தீப்பிடித்து பரவியது. இதில், வீட்டில் இருந்த அழகுராஜா நண்பர்கள் அனைவரது மீதும் தீ பற்றிய நிலையில், அழகுராஜா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இந்த விபத்தில், 4 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).