காதலியை கொன்றுவிட்டு, வாலிபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொன்றுவிட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை (Love Affair Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 25, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள திபாயில், காதல் தோல்வியடைந்து பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில் வாலிபர் ஒருவர் தனது மைனர் காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு (Murder), பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Today's Latest News In Tamil: பீலா வெங்கடேசன் மரணம் முதல் சூப்பர் 4ல் இந்தியா அபார வெற்றி வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
காதலியை கொன்று வாலிபர் தற்கொலை:
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரை சேர்ந்தவர் பப்லு. இவர், முசாபர்நகரைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து அவருடன் ஓடிவிட்டார். இதனையடுத்து, பப்லுவின் மாமா பிரமோத், திபாயில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க ஏற்பாடு செய்திருந்தார். இதனிடையே, சிறுமி கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தகவலின்பேரில், காவல்துறையினர் அதிகாலை 3 மணிக்கு வீட்டை சோதனை செய்தபோது, பப்லு கூரையிலிருந்து குதித்து தப்பிக்க திட்டமிட்டார். அப்போது, சிறுமி வர மறுத்துள்ளார். இதனால், அவர் தனது காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை (Suicide) செய்துகொண்டார்.
போலீஸ் விசாரணை:
இதனையடுத்து, காவல்துறையினர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலைக்குப் பிறகு தற்கொலை என்று கருதப்படுகிறது. முழு விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(The above story first appeared on LatestLY on Sep 25, 2025 04:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

