College Student Sexual Harassment: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி..!

பெங்களூருவில் கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து தாக்கியுள்ளனர்.

College Student Sexual Harassment: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி..!
Sexual Harassment (Photo Credit: Pixabay)

மார்ச் 26, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் கல்லூரிக்கு தனியாக நடந்து சென்றுள்ளார். Repatriation Of Afghan Refugees: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி – சுமார் 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்ப முயற்சி..!

அந்த வழியில் வந்த வாலிபர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே அந்த மாணவி அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வருவதை பார்த்த அந்த வாலிபர் தப்பி ஓட முயற்சித்தார். இருப்பினும், அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அடித்து தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, ஜெயநகர் காவல்துறையினர் விரைந்து வந்ததை அடுத்து பொதுமக்கள் அந்த வாலிபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில். அவர் பெயர் சுரேஷ் (வயது 26) என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 26, 2024 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).