மார்ச் 26, இஸ்லாமாபாத் (World News): ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து ஏராளமானோர் பாகிஸ்தானில் வந்து தஞ்சம் அடைந்தனர். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் குடியேறினர். பாகிஸ்தான் தனது நாட்டின் பொருளாதார நெருக்கடியால் நாட்டில் உள்ள சட்ட விரோத அகதிகளை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறது. World Idli Day 2024: காலையில் காணும் நிலவுக்கு இன்று விசேஷ தினம்.. ஆவி பறக்க இட்லி தினத்தைக் கொண்டாடுங்கள்..!
இதில் முதற்கட்டமாக சுமார் 13 லட்சம் அகதிளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, இரண்டாவது கட்டமாக குடியுரிமை வைத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை கொண்டு கணக்கெடுக்க நேற்று வரை கால அவகாசம் விதிக்கப்பட்டது. இதன்மூலம், சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் ஆப்கானிஸ்தான் குடியுரிமை வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்களையும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கே அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் (ஏப்ரல்) இந்த நடவடிக்கைகள் முடியலாம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.