Gujarat Shocker: அந்தரங்க உறுப்பில் கம்ப்ரசர் குழாயை சொருகிய உறவினர்.. வாலிபர் உயிரிழப்பு..!

குஜராத்தில் உறவினர் வேடிக்கைக்காக அவரது அந்தரங்கப் பகுதியில் கம்ப்ரசர் பைப்பைத் திணித்ததால், வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat Shocker: அந்தரங்க உறுப்பில் கம்ப்ரசர் குழாயை சொருகிய உறவினர்.. வாலிபர் உயிரிழப்பு..!
Dead Body (Photo Credit: Pixabay)

ஜனவரி 28, காந்திநகர் (Gujarat News): குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், நேற்று முன்தினம் (ஜனவரி 26) காடியில் உள்ள ஒரு உலோக நிறுவனத்தில் பணிபுரியும் அவரது சகோதரர் கெவாபாய் மற்றும் அவரது நண்பர்களைப் பார்க்கச் சென்றுள்ளார். அன்று மாலையில், அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, ​​பிரகாஷின் உறவினரான அல்பேஷ், விளையாட்டுத்தனமாக கம்ப்ரசர் குழாயை (Compressor Pipe) அவரது அந்தரங்க உறுப்புகளில் செலுத்தினார். Boy Dies After Horse Kicks: குதிரை உதைத்து சிறுவன் பலி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

வாலிபர் பரிதாப பலி:

இதனால், சற்று நேரத்தில் பிரகாஷ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணையில், பிரகாஷின் சகோதரர் கெவாபாய் கூறுகையில், கம்ப்ரசர் குழாயில் அதிக காற்றழுத்தம் இருப்பதை அல்பேஷ் அறிந்திருந்தார். இருப்பினும், அதையும் மீறி அந்தரங்கத்தில் செலுத்தினார். இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கெவ்பாய் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).