Boy Dies After Horse Kicks: குதிரை உதைத்து சிறுவன் பலி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

உத்தர பிரதேசத்தில் திருமண கொண்டாட்ட நிகழ்வின் போது, குதிரை உதைத்ததில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Boy Dies After Horse Kicks: குதிரை உதைத்து சிறுவன் பலி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Boy Dies After Horse Kicks (Photo Credit: @gaurav3vedi X)

ஜனவரி 28, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்தின் போது, பெண் குதிரையால் (Horse) உதைக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Money, Sex and Murder: பெண்ணை கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. கல்வெட்டு தொழிலாளி வெறிச்செயல்..!

சிறுவன் பலி:

அந்த வீடியோவில், கான்பூரில் ஒரு திருமண கொண்டாட்டத்தின் போது பெண் குதிரை நடனமாடுகிறது. அப்போது, அதன் அருகில் சென்ற சிறுவனை, குதிரை பின்னங்கால்களால் எட்டி உதைத்தது. குதிரையின் வேகமான உதை குழந்தையை கடுமையாக பாதித்தது. இதனால், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).