Woman Murder: பெண்ணை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.., நடந்தது என்ன..?

கேரளாவில் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Murder: பெண்ணை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.., நடந்தது என்ன..?
Woman Murder Case in Kerala (Photo Credit: Facebook)

நவம்பர் 23, கொல்லம் (Kerala News): கேரள மாநிலம், கொல்லம் (Kollam) அருகே கருணாகரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 48). இவர், தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 06-ஆம் தேதி முதல் விஜயலட்சுமி காணவில்லை என அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். Road Accident: கார் மோதி வயதான தம்பதி பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

புகாரின்பேரில், காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அம்பலபுலா பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண்ணின் சடலம் (Dead Body) விஜயலட்சுமி என அடையாளம் காணப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விசாரிக்கையில், விஜயலட்சுமி கரூர் பகுதியை சேர்ந்த திருமணமாகாத ஜெயச்சந்திரன் என்பவருடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில், இருவரும் நீண்ட நாட்களாக தகாத உறவில் இருந்து வந்துள்ளனர்.

அப்போது, விஜயலட்சுமி வேறொரு நபருடன் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதனை கண்டித்த ஜெயச்சந்திரன், ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை (Murder) செய்தார். மேலும், அவரது உடலை வீட்டிற்கு அருகே குழிதோண்டி புதைத்துள்ளார். அவரது நகைகளை எடுத்துக்கொண்டார். மேலும், தன் மீது சந்தேகம் வராமல் இருக்க விஜயலட்சுமியின் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து அரசுப் பேருந்தில் போட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, ஜெயச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).