Heart Attack: உடற்பயிற்சி செய்த வாலிபர் மாரடைப்பால் பலி.. சோக சம்பவம்..!

உத்தரகாண்டில் உடற்பயிற்சி செய்த வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Heart Attack: உடற்பயிற்சி செய்த வாலிபர் மாரடைப்பால் பலி.. சோக சம்பவம்..!
Young Man Dies of Heart Attack (Photo Credit: @T_Investor_ X)

ஏப்ரல் 21, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், பாவ்ரி கார்வால் (Pauri Garhwal) பகுதியை சேர்ந்தவர் பிரமோத் பின்ஜோலா. இவர், தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். தினந்தோறும் அதிகாலை எழுந்து வீட்டிற்கு வெளியில் சென்று உடற்பயிற்சிகளை செய்து வந்துள்ளார். Doctors Beat Old Man: முதியவரை தரதரவென இழுத்து சென்ற மருத்துவர்.. அதிர்ச்சிகர சம்பவம்..!

வாலிபர் மரணம்:

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு அதிகாலையிலேயே சென்ற அவர், சாலையில் நின்றபடி உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது, உடல் சோர்வு ஏற்பட்டதால் பயிற்சியை நிறுத்திவிட்டு, அருகில் அமர்ந்துள்ளார். அப்போது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததால், அப்பகுதியில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, அவ்வழியாக சென்ற சிலர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை:

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் (Cardiac Arrest) உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் உயிரிழந்த காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).