செப்டம்பர் 09, பலியா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பலியா (Ballia) மாவட்டத்தில் ரஸ்ரா கோட்வாலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 15 சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று, ரோஹித் கவுர் (வயது 20) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று, அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறந்தநாள் விழாவில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆண் நண்பர்கள் வெறிச்செயல்..!
சிறுமி பாலியல் பலாத்காரம்:
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், ரோஹித் கவுர் மற்றும் அவரது பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் (செப்டம்பர் 07) ரோஹித் வீட்டில் இருந்து சிறுமி மீட்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், சிறுமி பலமுறை பலாத்காரம் (Sexual Assault) செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, ரோஹித் கவுர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3