4 Students Sexually Harassed: 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முன்னாள் மாணவர் போக்சோவில் கைது..!

கர்நாடகாவில் பள்ளியில் விளையாட்டு கற்றுத்தருவதாகக் கூறி, 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

4 Students Sexually Harassed: 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முன்னாள் மாணவர் போக்சோவில் கைது..!
Arrest | Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 10, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம், பாண்டவபுரா தாலுகா மேல்கோட்டை நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் யோகி (வயது 25). Car Sank Into The Lake: ஏரியில் மூழ்கிய கார்; வடமாநிலத்தை சேர்ந்தவர் நீரில் மூழ்கி பலி..!

இவர், அப்பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஓவியம் வரைவது மற்றும் விளையாட்டுகளை கற்றுக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதன்படி, அவர் அதற்கான வேலைகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் தன்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்துள்ளார். மேலும், சில மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து, அவர்களை மிரட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் இச்சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், இதுதொடர்பாக பெற்றோர்கள் மேல்கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், யோகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).