Died file pic (Photo Credit: Pixabay)

ஜூலை 10, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. நாராயணபுரம் ஏரி (Narayanapuram Lake Pallikaranai) அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஏரியில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் நீரில் மூழ்கினர். இதனைக்கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிகரணை காவல்துறையினர் கிரேன் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு காரை கரை சேர்த்தனர். Father Son Suicide Caught by CCTV: இரயில் முன் பாய்ந்து தந்தை-மகன் தற்கொலை; நெஞ்சை பதறவைக்கும் இறுதி நொடிகள்.. பதறவைக்கும் காட்சிகள்.!

இதனையடுத்து, அந்த காரில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுசல் என்பவர் தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். கார் ஓட்டுநர் ராஜசேகர் (வயது 35), படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், ராஜசேகர் தனக்குச் சொந்தமான காரை சிறுசேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வந்துள்ளார். நேற்றிரவு அந்நிறுவன ஊழியர்களை பல்லாவரத்தில் இறக்கி விட்டுவிட்டு, திரும்பி சிறுசேரி சென்றபோது இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.