Young Man Died In Bike Accident : அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
ஆந்திர பிரதேசத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர், எதிரே வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 21, மேற்கு கோதாவரி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரியில் உள்ள தாடேபள்ளிகுடம் மண்டலம் பெண்டபாடு என்ற இடத்தில், அதிவேகமாக ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது (Car-Bike Accident) மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிஷோர் (வயது 20) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரமான இந்த விபத்து சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Bus Overturned In The Valley: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி..! 3 பேர் படுகாயம்..!
கிஷோர் ஆட்டோவை கடக்க முயன்றபோது, எதிரே வந்த கார் அவரது இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதியது. இதில், கிஷோர் சுமார் 10 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இவர்களை அடுத்து இன்னொரு வாகனத்தில் வந்தவர்களும், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் விழுந்தனர். இந்த சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து உதவ விரைந்தனர், இருப்பினும், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஒருவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இதுதொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
సీసీటీవీ ఫుటేజ్.. అతివేగం యువకుడు మృతికి కారణం.
పశ్చిమగోదావరి - తాడేపల్లిగూడెం మండలం పెంటపాడులో అతివేగంతో ఆటోను దాటబోయి కారును దికొట్టిన బైక్.. ప్రమాదంలో యువకుడు కిశోర్(20) మృతి, మరో యువకుడికి తీవ్రగాయాలు. pic.twitter.com/jjOSZOV3fs
— Telugu Scribe (@TeluguScribe) June 20, 2024
(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

