Shimla Bus Accident (Photo Credit: @ANI X)

ஜூன் 21, சிம்லா (Himachal Pradesh News): இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள ஜூப்பால் என்ற பகுதியில் மலைப்பாதையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பெரிய பள்ளத்தாக்கில் (Valley) பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இன்று காலை 6.45 மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. AUS Vs BAN Highlights: ஆட்டத்தில் மழை குறுக்கீடு; டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் 5 பயணிகள் உட்பட 7 பேர் இருந்துள்ளனர். இதில், 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

தற்போது, 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.