Allahabad High Court (Photo Credit: @BarandBench X)

பிப்ரவரி 16, அலகாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நீதிமன்றத்தில், மைனர் வயதுடைய சிறுமியை இளைஞர் கடத்திச்சென்று திருமணம் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்து, இன்று தனி நீதிபதி ராகுல் சதுர்வேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சிறைக்கு எதிரான குற்றவியல் நடைமுறை ரத்து: இந்த விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை வழக்கில் இருந்து விடுவித்தார். அவரின் மீதான குற்றவியல் நடைமுறைகளில் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அதற்கான காரணங்களையும் தனது தீர்ப்பின் வாயிலாக அறிவித்து இருந்தார்.

உறவில் விஷம் ஊட்டுவதலுக்கு சமம்: இதுகுறித்த தீர்ப்பில், "இரண்டு நபர்களுக்கு இடையேயான உண்மையான அன்பு, அவர்கள் மைனர்களாக இருந்தாலும், அவர்களின் அன்பை சட்டத்தின் வாயிலாக கட்டுப்படுத்த இயலாது. உறவில் இருந்தவர்களில் இளைஞர் மீது பெற்றோர் குற்றசாட்டு முன்வைப்பது, அவர்களின் திருமண உறவில் விஷம் ஊட்டுவதுபோன்றதாகும். SK21 titled Amaran: 'எஸ்கே21' படத்தின் டீசர் ரிலீஸ்.. அமரனாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! 

வீட்டை விட்டு சுயமாக வெளியேறிய சிறுமிகள்: நாம் சட்டத்தை மதிக்கும் தருணத்தில், திருமணம் செய்து அமைதியாக வாழ்க்கையை நடத்தி வரும் குடும்பத்தை வளர்க்கும் இளம் ஜோடிக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை வாயிலாக எடுக்கும் நடவடிக்கையை நியாப்படுத்த போராடவேண்டியிருக்கும். இவ்வழக்கில் சிறார்களாக இருப்பினும், இருவரும் தங்களின் ஒருமித்த உறவில் இருப்பதை விசாரணையில் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். ஆகையால் இளைஞருக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன. சிறுமிகள் தாங்களாக முன்வந்து வீட்டில் இருந்து வெளியேறியதும் வாதங்களில் உறுதி செய்யப்படுகிறது.

குற்றவியல் நடவடிக்கையால் வாழ்க்கை மாற்றம்: அவர்கள் தங்களின் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்யும் உரிமையை பயன்படுத்தி திருமணமும் செய்துகொண்டுள்ளார். அவர்கள் தங்களின் துணையுடன் இருக்க விரும்புகிறார்கள். இவ்வழக்கில் எதிர்கொள்ளப்பட்ட குற்றவியல் நடவடிக்கை காரணமாக வாழ்வாதாரம், வாழ்க்கை போன்றவை பயங்கரமானதாக மாற்றும்" என கூறியுள்ளனர்.